மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் பயணிக்கும் அரச பேரூந்தின் அவல நிலை
யாழ்பாணத்தில் இருந்து மன்னாரிற்கு பயணிகளை ஏற்றிவந்த அரச பேரூந்தின் நிலை மிகவும் மோசமாக காணப்படுவதாக பொது மக்கள் தொடர்சியாக குற்றம் சுமத்தி வருகின்றனர்
குறிப்பாக மன்னார் மாவட்ட போக்குவரத்து சாலை பேரூந்துகளின் நிலை கவலைக்கிடமாக காணப்படுவதுடன் தூர பிரயானங்களின் போது பேருந்துகள் நடுவீதிகளில் அடிக்கடி பழுதடைவதாகவும் பயணிகள் குற்றம் சுமத்துகின்றனர்
குறிப்பாக தொலைதூர பயணத்திற்கு தகுதியற்ற பேரூந்துகள் அதிக அளவில் சேவையில் ஈடுபடுவதாகவும் இதனால் பல்வேறு அசெளகரியங்களுக்கு உள்ளவதாகவும் பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர் இது தொடர்பில் மன்னார் சாலை முகாமையாளர் உட்பட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மற்றும் அரசாங்க அதிபர் தலைமையிலான கூட்டங்களிலும் தெரியப்படுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
Reviewed by Author
on
March 05, 2024
Rating:





No comments:
Post a Comment