ஊசி மருந்துகளால் தொடர்ந்து வைத்தியசாலைகளில் நடக்கும் மரணங்கள்
ராகமை போதனா வைத்தியசாலையில் ஊசி மருந்து செலுத்தப்பட்ட பின்னர் நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை மட்டத்திலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக ராகமை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சம்பத் ரணவீர தெரிவித்தார்.
கோ-அமோக்ஸிக்லெவ் என்ற ஊசி மருந்தை செலுத்திய பிறகு நோயாளி இறந்தார்.
எனினும் ஊசி மருந்தால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக மரணம் ஏற்பட்டதா? என்பது தொடர்பில் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
உயிரிழந்தவர் 50 வயதுடையவர் எனவும் காது தொடர்பான சுகயீனம் காரணமாக கடந்த 22ஆம் திகதி ராகமை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Reviewed by Author
on
March 30, 2024
Rating:


No comments:
Post a Comment