சிறைச்சாலைகளிலும் பொலிஸாராலும் நீதிக்கு புறம்பான கொலைகள்: ஜெனீவாவிற்கு அறிக்கை
கைதிகளின் உரிமைகளுக்காக வாதிடும் இலங்கையின் முன்னணி அமைப்பு ஒன்று, இலங்கை பொலிஸ் மற்றும் சிறைச்சாலைகளால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோத கொலைகள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபைக்கு விசேட அறிக்கையொன்றை வழங்கியுள்ளது.
ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவின் (CPRP) தலைவர் சுதேஷ் நந்திமால் சில்வா ஜெனீவாவில் இருந்து காணொளி மூலம் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.
"இலங்கையில் நடத்தப்பட்ட மனிதாபிமானமற்ற கொலைகள், பொலிஸ் மற்றும் சிறைச்சாலையில் இடம்பெற்ற சட்டவிரோத கொலைகள் தொடர்பான உண்மைகளை நாங்கள் முன்வைத்தோம்."
சித்திரவதை தொடர்பில் நீதிமன்றத்தினால் குற்றவாளியாகக் காணப்பட்ட ஒருவரை பொலிஸ் மா அதிபராக நியமித்தமை தொடர்பில் மேலும் இரண்டு அமைப்புகளுடன் இணைந்து அறிக்கை சமர்ப்பித்ததாக சுதேஷ் நந்திமால் சில்வா மேலும் வலியுறுத்தி
"கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு, சமூகம் மற்றும் மத மையம் (CSR) மற்றும் பெக்ஸ் ரோமனா ஆகியவற்றுடன் இணைந்து ஆவணம் ஒன்றை உருவாக்கி மனித உரிமைகள் குறித்த ஐ.நா விசேட அறிக்கையாளரிடம் ஒப்படைத்தோம்."
பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்திரவதை செய்தமை மற்றும் இதற்கென அதிகாரி ஒருவருக்கு உத்தரவிட்டமை தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்ட தேசபந்து தென்னகோன், பாதிக்கப்பட்டவருக்கு தனது தனிப்பட்ட பணத்தில் இருந்து இழப்பீடு வழங்க வேண்டும் என கடந்த டிசம்பரில் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வருபவர்கள் வலுக்கட்டாயமாக கடத்திச் செல்லப்படுவதாகவும் குற்றஞ்சாட்டும், கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவின் பணிப்பாளர் சபையின் தலைவர் சுதேஷ் நந்திமால் சில்வா ஜெனீவாவில் இருந்து வெளியிட்ட காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகளிலும் பொலிஸாராலும் நீதிக்கு புறம்பான கொலைகள்: ஜெனீவாவிற்கு அறிக்கை
Reviewed by Author
on
March 18, 2024
Rating:
Reviewed by Author
on
March 18, 2024
Rating:


No comments:
Post a Comment