மன்னார் காற்றாலை செயற்திட்டத்தை நிறுத்த கோரி சுற்றாடல் அபிவிருத்தி அதிகார சபையிடம் நேரடியாக ஆவணங்கள் கையளிப்பு
மன்னார் மாவட்டத்தில் அதானி நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள இரண்டாம் கட்ட காற்றாலை செயற்திட்டத்தை நிறுத்த கோரி மன்னாரில் பல்வேறுகட்ட போராட்டங்கள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது
இந்த நிலையில் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவினர் இன்றைய தினம் செவ்வாய் கிழமை மத்திய சுற்றாடல் அபிவிருத்தி அதிகாரசபை அலுவலகத்தில் நேரடியாக காற்றாலை செயற்திட்டத்தை நிறுத்த கோரி மக்களின் கருத்துக்கள் எதிர்ப்புக்கள் அடங்கிய ஆவணம் ஒன்றை கையளித்துள்ளதுடன் கடந்த மாதம் முழுவதும் மன்னாரில் காற்றாலைகள் வேண்டாம் என்ற தொணிப்பொருளில் மக்களிடம் சேகரிக்கப்பட்ட கையெழுத்து பிரதிகளையும் கையளித்துள்ளனர்
தொடர்சியாக காற்றாலை செயற்திட்டம் தொடர்பில் மக்களிடம் காணப்படும் கருத்துக்கள் மற்றும் எதிர்ப்புக்கள் தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகாரசபையிடம் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்ட நிலையில் மன்னார் மாவட்டத்தில் தீவக பகுதிக்குள் காற்றாலை செயற்திட்டம் வேண்டாம் என்ற அடிப்படையில் பல பொது அமைப்புக்கள்,சிவில் சமூக அமைப்புக்கள்,பறவை ஆர்வலர்கள்,சுற்று சூழலியளாலர்கள் தங்களது எதிர்பை காற்றாலை செயற்திட்டத்திற்கு எதிராக தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment