புதுவை பண்பாட்டுப் பெருவிழாவை முன்னிட்டு பல்வேறு போட்டிகள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவை மற்றும் புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவை இலண்டன் கிளை என்பன இணைந்து புதுக்குடியிருப்பில் ஏற்ப்பாடு செய்துள்ள புதுவை பண்பாட்டுப் பெருவிழா எதிர்வரும் 06.04.2024 அன்று புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் மிகவும் சிறப்பாக முன்னெடுக்கப்படவுள்ளது
குறித்த நிகழ்வில் வடமாகாண ஆளுநர் பி எஸ் எம் சாள்ஸ் மற்றும் இந்திய துணைத்தூதூவர் சாய் முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்
இந்நிலையில் இந்த புதுவை பண்பாட்டுப் பெருவிழாவினை முன்னிட்டு புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குட்ப்பட்ட கலஞ்ஞர்களுக்கான பல்வேறு போட்டி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன
அந்தவகையில் போட்டி நிகழ்வுகளின் ஆரம்ப நாளான நேற்று (30) புதுக்குடியிருப்பு பொன்விழா மண்டபத்தில் மாலைக்கு வாதாடிய மைந்தன் கூத்துப் போட்டியும் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி வளாகத்தில் நாட்டார் பாடல், கும்மி , தனி நடனம், பாடல் போட்டிகளும் இடம்பெற்றன
அதேவேளை இன்று (31) புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி வளாகத்தில் பேச்சு போட்டி, சொற்ச்சமர் சதுரங்க போட்டி உள்ளிட்ட போட்டிகள் இடம்பெற்று வருகின்றன குறித்த போட்டிகளில் வெற்றி மீட்டும் கலஞ்ஞர்களின் கலை நிகழ்வுகள் எதிர்வரும் 06.04 .2024 அன்று இடம்பெறும் புதுவை பண்பாட்டுப் பெருவிழாவில் அரங்கேற்றப்படுவதோடு வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Reviewed by Author
on
March 31, 2024
Rating:


No comments:
Post a Comment