சிறப்பாக இடம்பெற்ற மகளிர் தின விளையாட்டு விழா
தாமரை மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் ஏற்ப்பாட்டில் வள்ளிபுனம் தாமரை சுய உதவிக் குழுவும் ஏனைய மகளிர் சுய உதவிக் குழுக்களும் இணைந்து நடத்துகின்ற மகளிர் தின விளையாட்டு விழா நேற்று (30) வள்ளிபுனம் செஞ்சோலை விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக இடம்பெற்றது
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தாமரை மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் ஏற்ப்பாட்டில் வள்ளிபுனம் தாமரை சுய உதவிக் குழுவும் ஏனைய மகளிர் சுய உதவிக் குழுக்களும் இணைந்து மகளிர் சுய உதவிக் குழு பெண்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் நோக்கோடு முன்னெடுக்கப்பட்ட விளையாட்டு விழா பார்ப்பவர்கள் கண்களுக்கு விருந்தாக மிக சிறப்பாக நடைபெற்றது
வயது வேறுபாடின்றி இல்ல விளையாட்டுப் போட்டிகள் போன்றே தமது சுய உதவிக் குழுக்களை சேர்ந்த பெண்களை முல்லை , தளிர் என இரண்டு இல்லங்களை அமைத்து குறித்த மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்கள் பான்ட் வாத்திய அணிவகுப்பு நடத்தி, சிறப்பான இசையும் அசைவும், விளையாட்டு போட்டிகள் என மிக சிறப்பாக இந்த விளையாட்டு விழா சிறப்பாக இடம்பெற்றது
போட்டிகளின் முடிவில் வெற்றியீட்டியவர்களுக்காக விருந்தினர்களால் பரிசில்கள் கேடயங்கள் பணப்பரிசில்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment