இரட்டைவாய்க்கால் மாத்தளன் வரையான வீதியை புணரமைத்து தருவதாக இராஜாங்க அமைச்சர்சந்திரகாந்தன் வாக்குறுதி!
இரட்டைவாய்க்கால் முதல் மாத்தளன் வரையான வீதியை புணரமைத்து தருவதாக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் முல்லைத்தீவில் மக்களுக்கு வாக்குறுதி வழங்கியுள்ளார்கள்.
இராஜாங்க அமைச்சராக இருக்கும் சிவனேசதுரை சந்திரகாந்தன் அமைச்சு பதவியினை பொறுப்பெடுத்ததில் இருந்து முதல் தடவையாக முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்
28.03.2024 முல்லைத்தீவிற்கு பயணம் மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர்களான சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் காதர் மஸ்தான் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் முல்லைத்தீவு அம்பவலவன் பொக்கனை கிராமத்தில் மக்கள் சந்திப்பு ஒன்றினை நடத்தியுள்ளார்கள்.
இரட்டைவாய்க்கால் தொடக்கம் மாத்தளன் வரையான வீதி புனரமைப்பு தொடர்பில் அம்பலவன் பொக்கணை கிராம பொதுநோக்கு மண்டப கட்டத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாயங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் மற்றும் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்,முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன்,கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.
இதன்போது கிராமிய வீதிகள் அபிவிருத்தியின் கீழ் இரட்டைவாய்க்கால் தொடக்கம் மாத்தளன் வரையான வீதியினை புனரமைத்து தருவதாக இராஜாங்க அமைச்சர் மக்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.
Reviewed by Author
on
March 28, 2024
Rating:


No comments:
Post a Comment