சர்வதேச நீர் தினத்தை முன்னிட்டு குருதி கொடை
சர்வதேச நீர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் குருதி கொடை வழங்கும் நிகழ்வு இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை மற்றும் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் ஈடு இணையற்றது நம் உடலில் ஓடும் குருதி !அதை பிறர்க்கும் சிறிது பகிர்ந்தளிக்க ஏற்போம் இந்தநாளில் உறுதி ! எனும் தொனிப் பொருளில் குருதி நன்கொடை வழங்கும் நிகழ்வானது முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இன்றைய தினம் (26.03.2024) காலை இடம்பெற்றிருந்தது.
குறித்த குருதி கொடை வழங்கும் நிகழ்வில் இளைஞர்கள், இளம் குருதி கொடையாளர்கள், இராணுவத்தினர், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை மற்றும் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட கிளையின் உறுப்பினர்கள்
என நூற்றுக்கு மேற்பட்டோர் குருதி வழங்கி இருந்தனர்.
Reviewed by Author
on
March 26, 2024
Rating:


No comments:
Post a Comment