மன்னார் பேசாலை பிரதேச வைத்திய சாலையில் நடைபெற்ற ரத்ததான முகாம் ..
-மன்னார் பேசாலை வளர் கலை மன்றத்தின் ஐம்பதாம் ஆண்டு பொன்விழாவையொட்டி மன்னார் பேசாலை பிரதேச வைத்தியசாலையில் மாபெரும் ரத்ததான முகாம் இன்று சனிக்கிழமை (2) காலை 9 மணிக்கு ஆரம்பமானது.
மன்னார் மாவட்ட வைத்திய சாலைகளில் ஏற்பட்டுள்ள குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக குறித்த குருதி நன்கொடை நிகழ்வு இடம்பெற்றது.
பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தின் பங்கு தந்தை மற்றும் பேசாலை பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் மன்னார் பொது வைத்தியசாலை குருதி கொடை பிரிவு வைத்திய அதிகாரி மற்றும் வளர் கலை மன்றத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர். நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதன் போது அதிகமானவர்கள் கலந்து கொண்டு இரத்த தான செய்தமையும் குறிப்பிடத்தக்கது.
Reviewed by Author
on
March 02, 2024
Rating:

.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)

No comments:
Post a Comment