வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்
வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா, வைரபுளியங்குளம், புகையிரதநிலைய வீதியில் இன்று (21.03) மதியம் இவ் விபத்து இடம்பெற்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
வவுனியா நகரப் பகுதியில் புகையிரத நிலைய வீதி ஊடாக சென்ற முச்சக்கரண்டி கதிரேசு வீதியில் திரும்ப முற்பட்ட வேளையில் வைரவபுளியங்குளத்தில் இருந்து வவுனியா நகரம் நோக்கி சென்ற மோட்டர் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டர் சைக்கிள் சாரதிகள் இருவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரு வாகனங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன், குறித்த விபத்து தொடர்பில் வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Reviewed by Author
on
March 21, 2024
Rating:







No comments:
Post a Comment