வெளிநாட்டில் இருக்கும் நபரால் இலக்கு வைக்கப்படும் இலங்கை கோடீஸ்வரர்கள்
கொழும்பின் புறநகர் பகுதியான கடுவெல பகுதியில் இன்று அதிகாலை உள்ள தனியார் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எரிபொருள் நிரப்பு நிலையம் மூடப்பட்டிருந்த நிலையில் கடுவெல அதுருகிரி பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்து பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட போதும் அது வெடிக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு
குறித்த எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரின் வீட்டின் முன் சில மாதங்களுக்கு முன்னர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு ஓடிய சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த செயலை செய்த வெளிநாட்டில் இருக்கும் கைவரு முத்துவா என்பவரின் வலையமைப்பினால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கொரத்தோட்ட கைவரு முத்துவா என்பவருக்கு பல வர்த்தகர்கள் கப்பம் கட்ட மறுத்ததால், ஆட்களை பயன்படுத்தி இவ்வாறு அச்சுறுத்தி வருவதாக நவகமுவ பொலிஸ் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Reviewed by Author
on
April 12, 2024
Rating:


No comments:
Post a Comment