கிளிநொச்சிப்பகுதியில் தங்கம் கடத்திய பெண்கள் கைது
கிளிநொச்சிப்பகுதியில் சிறிய கார் ஒன்றில் 4 கிலோவுக்கும் அதிகமான தங்க கட்டியை கடத்தி சென்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று(27.04.2024) இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கைது நடவடிக்கையின் போது, 4 கிலோ 170 கிறாம் தங்க கட்டி மீட்கப்பட்டதுடன் காரில் பயணித்த இரண்டு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரகசிய தகவல்
யாழ்ப்பாணத்தில் இருந்து ஏ-09 வழியாக வவுனியாவுக்கு குறித்த காரொன்றில் மேற்படி எடையுடைய தங்கம் கடத்தப்படுவது தொடர்பாக இராணுவ புலனாய்வு பிரிவுக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதன் அடிப்படையில் உடனடியாக விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து கிளிநொச்சி கந்தசாமி ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் வைத்து வாகனத்தை சோதனையிட்ட விசேட அதிரடிப்படையினர் குறித்த தங்கத்தை மீட்டதுடன் சந்தேகத்தின் பெயரில் காரில் பயணித்த இரண்டு பெண்கள் உட்பட மூவரைக் கைது செய்துள்ளனர்
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Reviewed by NEWMANNAR
on
April 28, 2024
Rating:


No comments:
Post a Comment