சிறுவன் உற்பட இலங்கை அகதிகள் மூன்று பேர் ஐந்தாம் மணல் தீடையில் தஞ்சம். சுட்டெரித்த வெயிலில் சூடு தாங்க முடியாமல் தவித்த அகதிகளை மீட்ட மரைன் பொலிஸார்.
>இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு உள்ள ஈழத் தமிழர்கள் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இலங்கை மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் உட்பட 3 நபர்கள் தனுஷ்கோடி அடுத்த ஐந்தாம் மணல் தீடையில் இன்று (22) காலை தஞ்சம் அடைந்துள்ளதாக அப்பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதை அடுத்து சுட்டெரிக்கும் வெயிலில் வெப்பத்தில் சூடு தாங்க முடியாமல் ஐந்தாம் மணல் தீடையில் தஞ்சம் அடைந்த இலங்கை அகதிகளை மரைன் போலீசார் அதிரடியாக நடவடிக்கை எடுத்து கடலுக்குள் சென்று பாதுகாப்பாக மீட்டு கரை கொண்டு வந்தனர்.
இதனால் சூடு தாங்க முடியாமல் தவித்த அகதிகள் மரைன் போலீசாருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Reviewed by Author
on
April 22, 2024
Rating:
.jpg)

No comments:
Post a Comment