14 வயது சிறுமியை கடத்திய 17 வயது இளைஞனால் பரபரப்பு
14 வயது மாணவியை கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் 17 வயது இளைஞன் ஒருவரை காத்தான்குடி (Kattankudy) பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை இன்று (15.04.2024) காலை இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி கிரான்குளத்தை சேர்ந்த மேற்படி மாணவியை காதல் என்ற பெயரில் கடத்திச் சென்ற திருகோணமலை (Trincomalee) குச்சவெளியைச் சேர்ந்த 17 வயது இளைஞன் கொழும்பில் சில நாட்கள் அவருடன் தங்கியிருந்துள்ளார்.
வைத்திய பரிசோதனைகள்
அதனையடுத்து, மீண்டும் நேற்று சொந்த இடம் திரும்பி வீட்டில் தங்கியிருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் காத்தான்குடி பொலிஸார் குறித்த இளைஞரை கைது செய்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட இளைஞன் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், குறித்த மாணவி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reviewed by Author
on
April 15, 2024
Rating:


No comments:
Post a Comment