மன்னாரில் நன்னீர் புகைக் கருவாடு பதனிடும் உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பாலைப் பெருமாள் கட்டு கிராம உத்தியோகத்தர் பிரிவில் குருவில் கிராமத்தில் நன்னீர் புகைக் கருவாடு பதனிடும் உற்பத்தி நிலையம் திறந்து வைக்கப்பட்டது
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் .க.கனகேஸ்வரன் அவர்களினால் நேற்று புதன்கிழமை (3 )திறந்து வைக்கப்பட்டது.
உலக உணவு திட்டத்தின் நிதி பங்களிப்புடன் நன்னீர் புகைக் கருவாடு உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் குருவில் கிராமத்தில் நன்னீர் புகைக் கருவாடு உற்பத்தியில் ஈடுபடும் தொழில் முயற்சியாளரினால் அமைக்கப்பட்ட உற்பத்தி நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் க.அரவிந்தராஜ் ,மன்னார் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட உலக உணவுத் முகாமைத்துவ அலகு தலைமை அதிகாரி ,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Reviewed by Author
on
April 04, 2024
Rating:

%20(1).jpg)
.jpg)
.jpg)

No comments:
Post a Comment