பயங்கரவாதத்தை பரப்பி விட்டு கோதுமை மாவுக்கு கையேந்தும் நாடு பாகிஸ்தானை கடுமையாக சாடிய மோடி
பயங்கரவாதம் சப்ளை செய்த நாடு இப்போது கோதுமை மாவுக்காக ஏங்குகிறது என்று பாகிஸ்தானை குறிவைத்து பிரதமர் மோடி சாடியுள்ளமையானது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவை தேர்தலை முன்னிட்டு நேற்று மத்தியபிரதேசம், உபியில் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டவேளையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி,
ஒரு காலத்தில் வெளிநாடுகளில் இருந்து அதிக ஆயுதங்களை வாங்கிய இந்தியா, தற்போது உயர் தொழில்நுட்ப ஆயுதங்களை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகளை சப்ளை செய்துள்ளது.
உலகில் பல நாடுகளின் நிலை மோசமடைந்துள்ளது. பல நாடுகள் திவாலாகி வருகின்றன. பயங்கரவாதம் சப்ளையராக இருந்த நமது அண்டை நாடுகளில் ஒன்று கூட, இப்போது கோதுமை மாவு சப்ளைக்காக போராடி வருகிறது.
தேசம் முதலில் என்ற கொள்கையுடன் எனது அரசு செயல்படுகிறது. எந்தத் தரப்பில் இருந்து வரும் எந்த அழுத்தத்திற்கும் எனது அரசு அடிபணியாது. உலகின் பல்வேறு பகுதிகளில் போர் மேகங்கள் சூழ்ந்து கொண்டிருக்கும் போது, எந்தத் தேவையையும் சமாளிக்கும் திறன் கொண்ட அரசு நமது நாட்டிற்கு தேவை என குறிப்பிட்டார்.
இவருடைய குறித்த பேச்சாள் தற்போது புதிய சர்ச்சை வெளியாகியுள்ளது. பாகிஸ்த்தான் ஆதரவாளர்கள் சமூகவலைத்தளங்கள் வாயிலாக மோடியை விமர்ச்சித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Reviewed by Author
on
April 20, 2024
Rating:
.jpg)

No comments:
Post a Comment