யாழில் சந்தேகத்திற்கு இடமான வீட்டில் கைது செய்யப்பட்ட பெண்கள் உட்பட நால்வர்
யாழ்ப்பாணம் - கந்தர்மடம் மணல்தறை வீதிப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வீடொன்றை முற்றுகையிட்டு வீட்டு உரிமையாளர், இரண்டு பெண்கள் மற்றொரு ஆண் என நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விசாந்த தலைமையிலான யாழ். மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
சில நாட்களாக குறித்த வீட்டில் அதிகளவு பெண்கள் மற்றும் ஆண்கள் வந்து போவதாக பொலிஸ் புலனாய்வாளர்களுக்கு அந்தப் பகுதி ஊர்மக்களினால் தகவல் வழங்கபட்டுள்ளது.
இதன்போது நேற்று (09) வீட்டை முற்றுகையிட்ட வேளை இரு பெண்களும் ஆண் ஒருவரும் மற்றும் வீட்டின் உரிமையாளரையும் பொலிஸார் கைது செய்தனர்.
இதேவேளை மற்றொருவர் மதில் பாய்ந்து தப்பி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தப்பிச் சென்றவருடையதாக கருதப்படும் கைத்தொலைபேசியை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகிறன்றனர்.
Reviewed by Author
on
May 10, 2024
Rating:


No comments:
Post a Comment