புகைப் பழக்கத்திற்கு உள்ளாகும் 15 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் பெற்றோருக்கு வைத்தியர்கள் எச்சரிக்கை
3 முதல் 15 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாக சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாளை (31 ஆம் திகதி) அனுஷ்டிக்கப்படும் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பதின்ம வயதினரிடையே புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதாக கணக்கெடுப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கணக்கெடுப்பில், 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களில் 5.7 வீதம் பேர் ஒரு முறையாவது புகைபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த மாணவர்களில் 3.7 வீதம் பேர் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த குழந்தைகள் பெரும்பாலும் எலக்ட்ரானிக் சிகரெட்டைப் பயன்படுத்திய பிறகு புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எலக்ட்ரானிக் சிகரெட்டுகளில் பல்வேறு இரசாயனங்கள் இருப்பதாகவும் வைத்தியர் சன்ன டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
எலக்ட்ரானிக் சிகரெட்டுக்கு அடிமையாகும் இவர்கள் மிக விரைவாக சிகரெட்டுக்கு அடிமையாகி விடுகின்றனர் என நிபுணர் தெரிவித்துள்ளார்.
பெற்றோர்கள் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் புகைப்பிடிக்கும் பழக்கத்தால் குழந்தைகளுக்கு சுவாச நோய்கள் மற்றும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
Reviewed by Author
on
May 30, 2024
Rating:


No comments:
Post a Comment