மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற நுங்கு விழா
வன்னி மண் அறக்கட்டளை அனுசரணையுடன் மன்னார் மாவட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களின் விற்பனை நிலையத்தின் அமுலாக்கத்துடனும் நுங்கு விழா இன்று வெள்ளிக்கிழமை (10) காலை 10.30 மணியளவில் மன்னாரில் நடைபெற்றது.
மன்னார் மாவட்ட செயலக வளாகத்தில் அமைந்துள்ள மன்னார் மாவட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களின் விற்பனை நிலையத்தின் முன்பாக சிறப்பாக இடம்பெற்ற நுங்கு திருவிழாவில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மன்னார் மாவட்ட மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை விசேட அம்சமாகும்.
நுங்கு திருவிழாவானது பனை மரத்தின் தேவை குறித்தும் பனை மரத்தினால் பெறப்பட கூடிய பயன்கள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நுங்கு திருவிழா அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
Reviewed by Author
on
May 10, 2024
Rating:





No comments:
Post a Comment