முள்ளிவாய்கால் கஞ்சி சிங்கள மக்களும் ஆர்வத்துடன் பருகினர்
மன்னார் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில்
மன்னார் பள்ளிமுனை பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று(11) சனிக்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் பள்ளிமுனை பெருக்க மரத்துக்கு முன்பாக இடம் பெற்றது.
இதன் பொழுது மன்னார் மாவட்டத்தில் யுத்த காலத்தில் தங்கள் பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள் முப்படையினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர்கள் உறவினர்களால் இணைந்து
மன்னார் பள்ளிமுனை பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது.
பள்ளிமுனை பொதுமக்கள்,இளைஞர்கள் யுவதிகள் உட்பட அதிகளவான மக்கள் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் கஞ்சியை அருந்தி சென்றனர்
அதே நேரம் அப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட சிங்கள மக்களும் முள்ளிவாய்கால் கஞ்சியை ஆர்வத்துடன் அருந்தியமை குறிப்பிடத்தக்கது
Reviewed by Author
on
May 11, 2024
Rating:


No comments:
Post a Comment