லண்டன் சென்று கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் வியன்னாவில் தரையிறக்கம்!
லண்டன் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் பயணியொருவருக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக சிகிச்சைக்காக ஆஸ்திரியாவின் வியன்னா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
இந்த சம்பவம் கடந்த 1ஆம் திகதி அன்று இடம்பெற்றுள்ளது.
272 பயணிகளுடன் பயணித்த இந்த விமானமானது, பயணியொருவருக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக சிகிச்சைக்காக ஆஸ்திரியாவின் வியன்னா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
பின்னர் மீண்டும் லண்டன் நோக்கிப் புறப்படவிருந்த இந்த விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வியன்னாவில் இருந்து புறப்படத் தாமதமாகியது.
இந்நிலையில், விமானம் புறப்படும் வரை ஐரோப்பாவுக்கான விசாவை பெற்றிருந்த அனைத்து பயணிகளையும் வியன்னா நகரில் தங்க வைக்க வசதிகள் செய்யப்பட்டன.
பின்னர் இந்த விமானமானது நேற்று (2) லண்டன் நேரப்படி 21:30 மணிநேரத்தில் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தை வந்தடைந்தது.
Reviewed by Author
on
May 03, 2024
Rating:


No comments:
Post a Comment