யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பிரபல நடிகர்
>தென்னிந்திய நடிகரும் இயக்குநருமான ஆர். பாண்டியராஜன் இன்று (05) யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார்.
அவர் யாழ்ப்பாணம் கொழும்புத்துறை இல. 199 சுண்டுக்குழியில் அமைந்துள்ள மண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு பட்டிமன்றத்தில் கலந்துகொண்டார்.
"மக்களுக்கு சினிமாவும் சீரியலும் வழிகாட்டுகிறதா? வழிமாறுகின்றதா?" என்றொரு தலைப்பிலும் "இன்றைய சூழ்நிலையில் பிறருக்கு உதவி செய்வது ஆபத்தே? ஆனந்தமே?" என்ற தலைப்பிலும் இரு பட்டிமன்றங்கள் நடைபெற்றன.
இந்த பட்டிமன்றத்தினை காண பல இடங்களிலும் இருந்து மக்கள் வருகை தந்தனர்.
இதில் கிருபா சாரதி பயிற்சிசாலை அதிபர் அ.கிருபாகரன், பட்டிமன்ற நடுவர் முனைவர் நெல்லை பி.சுப்பையா, கவிஞர் பிரிய நிலா உள்ளிட்ட பட்டிமன்ற பிரவாத அணிசேர் கலைஞர்கள் பலரும் பங்கெடுத்தனர்.
Reviewed by Author
on
May 05, 2024
Rating:


No comments:
Post a Comment