மண்டைதீவு கடலில் மீனவர் படுகொலை; 38ஆவது நினைவேந்தல்
யாழ்ப்பாணம் - மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட்ட 31 மீனவர்களின் 38ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
குறித்த நினைவுதின அஞ்சலி நிகழ்வானது யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட 31 மீனவர் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் இடம்பெற்றுது.
இந்த அஞ்சலி நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட மீனவர்களின் உறவினர்கள், கிறிஸ்தவ மதகுருமார்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு கொல்லப்பட்ட மீனவர்களுக்காக வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் அவர்களுக்கு அஞ்சலியும் செலுத்தினர்.
மேலும், 1986ஆம் ஆண்டு ஜுன் மாதம் 10ஆம் திகதி குருநகர், இறங்குதுறையில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற மீனவர்கள் 31 பேரும் மண்டைதீவு கடலில் வைத்து கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Reviewed by Author
on
June 10, 2024
Rating:


No comments:
Post a Comment