பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து
வரக்காபொல பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
மாலபே ராகுல வித்தியாலயத்திலிருந்து ரண்டம்பே நோக்கி மாணவர்கள் குழுவொன்றை ஏற்றிச் சென்ற பேருந்தொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
வரக்காபொல பிரதேசத்திலிலுள்ள கால்வாய் ஒன்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் உள்ளிட்ட 13 பேர் காயமடைந்துள்ளனர்.
அவர்கள் சிகிச்சைகளுக்காக வரகாபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வரக்காபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
Reviewed by Author
on
June 10, 2024
Rating:


No comments:
Post a Comment