உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் கொழும்பு தெரிவு
இவ்வாண்டை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட QS (Quacquarelli symonds) உலகத் தர வரிசைப் பட்டியலில் உலகில் சிறந்த 1000 பல்கலைக்கழகங்களுள் கொழும்பு பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, கொழும்பு பல்கலைக்கழகம் இலங்கையில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
குறித்த தரவரிசையின் படி, வரலாற்றில் முதன் முறையாக கொழும்பு பல்கலைக்கழகம் இவ்வாறு சிறந்த 1000 பல்கலைக்கழகங்களுள் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, கொழும்பு பல்கலைக்கழகம் 951-1000 இடத்தை வகிக்கிறது.
இதற்கு முந்தைய வருடங்களில் கொழும்பு பல்கலைக்கழகமானது 1001 மற்றும் 1200 இடைப்பட்ட இடங்களில் காணப்பட்டது.
அதற்கு மேலதிகமாக கடந்த வருடத்தில் இந்த பட்டியலில் இடம்பெறாத ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் இம்முறை 1201-1400க்கும் இடைப்பட்ட இடத்தை வகித்துள்ளது.
பேராதனை பல்கலைக்கழகம் கடந்த ஆண்டில் காணப்பட்ட 1201-1400 இடைப்பட்ட இடங்களை இவ்வருடமும் வகிப்பதாக தெரிய வந்துள்ளது.
இலவசக் கல்வியை பெற்று வரும் 14,000க்கும் அதிகமான மாணவர்கள் காணப்படும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் இந்த வெற்றி அனைத்து மாணவர்களின், பணி புரிபவர்களின் அர்ப்பணிப்புக்கான பெறுபேறு என அதன் உபவேந்தர் பேராசிரியர் H.D. கருணாரத்ன தனது முகப்புத்தக பதவில் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment