தனிப்பட்ட இலாபங்களுக்காக முன்னெடுக்கப்பட்டதே பொதுவேட்பாளர்: முட்டாள் தனமான முடிவு என்கிறார் சாணக்கியன்
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளித்துள்ள தமிழ் கட்சிகள் தங்களது கட்சியின் சின்னங்களை அவருக்கு வழங்க மறுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ் பொது வேட்பாளரை முன்வைக்க வேண்டிய தேவை இல்லை என்றும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சானக்கியன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழ் பொது வேட்பாளருக்கான ஆதரவு தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சியின் மத்தியக் குழு கூடி தீர்மானிக்கும்.
ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் குழி தோண்டி புதைக்கும் விடயமாக மாறிவிடும் இந்த பொது வேட்பாளர் விடயம் எப்பொழுதும் தமிழ் மக்களின் பூரண ஆதரவு கிடைக்காது.
இது ஒரு தேவையில்லாத விடயம் என அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகும். தங்களுடைய தனிப்பட்ட இலாபங்களுக்காக இந்த விடயத்தை முன்னெடுத்து வருகிறார்கள் என தெரிய வருகிறது.
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு என்பது தமிழ் தேசிய கூட்டமைப்பாக கூடி தான் ஒன்றாக முடிவெடுக்க வேண்டும். இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கும் சிறப்பான எதிர்காலத்தை அமைக்க கூடிய ஒருவருக்கு நாங்கள் நிச்சயமாக ஆதரவு வழங்க வேண்டும். எதிர்வரும் காலங்களில் ஒரு தீர்மானத்தை எடுப்போம்” எனத் தெரிவித்தார்.
 
        Reviewed by Author
        on 
        
August 10, 2024
 
        Rating: 


No comments:
Post a Comment