ஆசிரியர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மூவர் கைது - வவுனியாவில் சம்பவம்
வவுனியா, வீரபுரம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியர்கள் இன்று (19) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
கடந்த வாரம் பாடசாலையில் உயர்தர மாணவர்களுக்கான ஒன்று கூடல் நிகழ்வு இடம்பெற்றிருந்தது. இதன்போது இளைஞர் ஒருவர் ஆண் ஆசிரியர் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி, மாணவி ஒருவரிடம் பேச வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதற்கு ஆசிரியர் மறுப்பு தெரிவித்த நிலையில் அதனால் ஏற்பட்ட முரண்பாட்டினால் ஆசிரியர் மீது அன்றையதினம் மாலை குறித்த ஆசிரியர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்றவர்கள் ஆசிரியர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக நேற்று (18) வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நேற்று மாலை ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் செட்டிகுளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் தமக்கு போதிய பாதுகாப்பு இல்லை என தெரிவித்து பாடசாலையின் அனைத்து ஆசிரியர்களும் இன்று சுகவீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை இதற்கு முன்னரும் இரு ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவங்களும் குறித்த பாடசாலையில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Reviewed by Author
on
November 19, 2024
Rating:


No comments:
Post a Comment