பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கு முல்லைத்தீவு மக்கள் அமோக வரவேற்ப்பு
இலங்கை தமிழரசுக் கட்சியின் வீட்டு சின்னத்தில் போட்டியிட்டு வன்னிதேர்தல் மாவட்டத்தில் வெற்றியீட்டிய பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்றைய தினம் (15) முல்லைத்தீவு நகரில் இடம்பெற்றுள்ளது.
நேற்றையதினம் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் வன்னித்தேர்தல் மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பாக போட்டியிட்டு மக்களின் அமோக ஆதரவுடன் வெற்றிவாகை சூடிய பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனை முல்லைத்தீவு மக்கள் அனைவரும் அணிதிரண்டு வரவேற்கும் நிகழ்வு இன்றையதினம் முல்லைத்தீவு நகர் பகுதியில் இடம்பெற்றிருந்தது.
இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமாகிய குறித்த நிகழ்வில் மக்களால் வெற்றியீட்டிய வேட்பாளருக்கு மாலை அணிவித்து வரவேற்று குறித்த வெற்றிக் கொண்டாட்டம் ஆரம்பமாகியிருந்தது.
குறித்த வெற்றி வரவேற்பு நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட மக்கள், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.
இதேவேளை தேர்தல் சட்டத்தை மீறி குறித்த நிகழ்வை செய்ய பொலிசார் தடைவிதித்த போதும் பெருமளவான மக்கள் திரண்டு இந்த வரவேற்ப்பு நிகழ்வை நடத்தியிருந்தனர்
Reviewed by Author
on
November 15, 2024
Rating:







No comments:
Post a Comment