அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மறைமாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை- அவர்களின் புத்தாண்டு செய்தி

 புதிய ஆண்டு பிறக்கும் போதும்,நாங்கள் வாழும் சூழலில் எத்தனையோ போர்கள் நடந்து கொண்டிருக்கின்றன.இதனால் மக்கள் கொல்லப் படுவதோடு,அனாதைகளாக இடம் பெயர்கின்றனர்.


எனவே ஜூபிலி ஆண்டில் உங்கள் அனைவருக்கும் ஆசீர்வாதங்கள் நிரம்ப கிடைக்க வேண்டும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.


அவர் விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கையில்,,,,,


2025 ஆம் ஆண்டு எங்களுக்கு புத்தாண்டாக பிறக்கிறது.இயேசுநாதர் பிறந்து 2025 ஆண்டு நிறைவேறுகின்றது என்பதை உணர்ந்து இந்த புத்தாண்டை அன்புடன் வரவேற்போம்.


நாங்கள் வாழும் சூழலில் எத்தனையோ போர்கள் நடந்து கொண்டிருக்கின்றன.உக்கிரைன் நாட்டிற்கு எதிராக ராஸ்யா போராடிக்கொண்டு இருக்கிறது.


ஸ்ராயல் பாலஸ்தீனத்திற்கு எதிராக  காஸாவில் போர் இடம் பெறுகின்றது.இந்த போரின் போது அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர்.


தமது உடைமைகளை இழக்கின்றார்கள்.பாரிய துக்கத்துடன் அவர்கள் வேறு இடங்களுக்கு பாதுகாப்பு தேடிச் செல்கின்றனர்.அவர்கள் எல்லாம் அனாதைகள் போல் பல இடங்களில் கூடி இருக்கிறார்கள்.


எனவே பிறந்துள்ள புத்தாண்டு 2025 ஆம் ஆண்டு திருத்தந்தை பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களினால் யூபிலி ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டது.


 அந்த யூபிலி ஆண்டின் ஆசீர்வாதங்கள் உங்கள் அனைவருக்கும் நிரம்பக் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.


பிறந்துள்ள 2025 ஆம் ஆண்டு உங்கள் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான எதிர்பார்ப்பு தரக்கூடிய ஒரு  ஆண்டாக அமைய வாழ்த்துகிறேன்.என அவர் மேலும் தெரிவித்தார்.






மன்னார் மறைமாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை- அவர்களின் புத்தாண்டு செய்தி Reviewed by Author on December 31, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.