அர்ச்சுனா எம்.பி மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக தற்போதுள்ள சட்டத்தின் கீழ் நடவடிக்கைகளை எடுக்குமாறு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பெப்ரவரி 3 ஆம் திகதி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அனுராதபுரம் பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அனுராதபுரம் பகுதியில் போக்குவரத்து பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதோடு, இது தொடர்பாக அனுராதபுரம் பொலிஸார் நீதிமன்றத்தில் ஆதாரங்களை சமர்ப்பித்திருந்தனர்.
அதன்படி, அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
Reviewed by Author
on
January 21, 2025
Rating:


No comments:
Post a Comment