சீனாவில் பரவும் HMPV வைரஸ் : இந்தியாவில் முதல் தொற்று உறுதி
சீனாவில் (India) கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் உருவான கோவிட் வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது சீனாவில் புதிய வைரஸ் ஒன்று பரவி வருகிறது.
எச்.எம்.பி.வி என அழைக்கப்படும் இந்த வைரசால் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முதல் மனித மெட்டா நியூமோவைரஸ் (HMPV) வைரஸ் தொற்று பாதிப்பு இந்தியாவின் (India) கர்நாடகாவில் கண்டறியப்பட்டுள்ளது.
பெங்களூருவை சேர்ந்த 8 மாத குழந்தைக்கு எச்.எம்.பி.வி தொற்று பாதிப்பு இருப்பதாக கர்நாடக மாநில சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது.
கோவிட் தொற்றை போன்றே இந்த வைரசால் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.
மேலும், சீனாவின் வடக்கு மாகாணங்களில் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளதோடு, இதில் சிறுவர்கள் பலர் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்காரணமாக உலக நாடுகள் பலவும் அச்சத்தில் உள்ளன.
Reviewed by Author
on
January 06, 2025
Rating:


No comments:
Post a Comment