கிளிநொச்சியில் வெள்ளம் – கடும் பாதிப்பில் மக்கள்
கிளிநொச்சி மக்கள் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் மூன்றாவது முறையாகவும் திறக்கப்பட்டதன் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் ஐயன் கோயிலடி, ஊரியான், பெரியகுளம் கண்டாவளை உள்ளிட்ட பகுதிகளில் வயல் நிலங்களுக்கும் அழிவினை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளப் பாதிப்பு காரணமாக குளங்களில் நீர்மட்டம் அதிகரித்தமையால் முதலைகளும் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக வீட்டிலோ அல்லது வெளியில் செல்வோர் தனிமையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும் வட்டக்கச்சி, பெரியகுளம் பகுதியில் இருந்து புளியம்பொக்கனை செல்லும் பிரதான வீதியில் வெள்ளம் குறுக்கரத்து பாய்வதன் காரணமாக கனரக வாகனங்கள் மாத்திரமே இவ்வீதி ஊடாக பயணிக்க கூடியதாக உள்ளது.
இதன் காரணமாக பாடசாலை மாணவர்கள் தமது கற்றல் செயற்பாட்டை மேற்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மழையுடன் கூடிய வானிலை இன்று குறைவடைந்தாலும், நீர்த் தேக்கங்களில் இருந்து வெளியேறும் நீர் மக்கள் குடியிருப்புக்களை ஊடறுத்து செல்வதால் மக்கள் மூன்றாவது முறையாகவும் வெள்ள பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
Reviewed by Author
on
January 23, 2025
Rating:


No comments:
Post a Comment