அண்மைய செய்திகள்

recent
-

பொலிசாரிடம் விடயங்களை தெளிவுபடுத்தி கிளிநொச்சி நகரில் தொடரும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரிய கையெழுத்து போராட்டம்

 நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிளிநொச்சி நகரில் பொதுச் சந்தைக்கு அருகில் கையெழுத்து போராட்டம்   ஒன்று இன்று (02)  ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது .


பாேராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி  நகரில்  பொதுச் சந்தைக்கு அருகில் குறித்த  கையெழுத்துப் போராட்டம்  மேற்கொள்ள தயாரான போது அங்குவந்த கிளிநொச்சி போக்குவரத்து பொலிசார் ஒலிபெருக்கி  அனுமதி பெற்று குறித்த கையெழுத்து போராட்டத்தை மேற்கொள்ளுமாறு தெரிவித்து போராட்டத்தை தடுத்து  நிறுத்தினர் 


பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்  அரசியல் கைதிகளையும்

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட பின்னர் நீதி மன்றத்தினால் விடுதலை செய்யப்பட்ட பின்பும் மீண்டும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளையும்  புதிய அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி குறித்த  கையெழுத்துப் போராட்டம்  தொடர்ச்சியாக வவுனியா , மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்று வருகின்றது 


இந்நிலையில் கிளிநொச்சியில் மட்டும் இவ்வாறு பொலிசார் இடையூறுகளை ஏற்ப்படுத்தி தடுத்து நிறுத்தியமைக்கு ஏற்ப்பாட்டாளர்கள் அதிருப்தி வெளியிட்டனர்


இதனைத் தொடர்ந்து கிளிநொச்சி பொலிஸ் நிலையம் சென்ற ஏற்ப்பாட்டாளர்கள் பொலிசாருக்கு விடயங்களை தெளிவுபடுத்திய பின்னர் பொலிசார் குறித்த கையெழுத்து  போராட்டத்தை மேற்கொள்ள அனுமதியளித்தனர் இதனை தொடர்ந்து  மீண்டும் குறித்த இடத்தில் கையெழுத்து போராட்டம் இடம்பெற்று வருகிறது 


குறித்த கையெழுத்து போராட்டத்தில் மத தலைவர்கள் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சமூக செயற்ப்பாட்டாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு தமது கையொப்பங்களை பதிவுசெய்கின்றனர்


நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி சேகரிக்கப்படும் குறித்த கையெழுத்துக்கள் அடங்கிய மகஜர் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது












பொலிசாரிடம் விடயங்களை தெளிவுபடுத்தி கிளிநொச்சி நகரில் தொடரும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரிய கையெழுத்து போராட்டம் Reviewed by Author on January 03, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.