கிளிநொச்சியில் நோயாளர்களை ஏற்றிசென்ற நோயாளர் காவுவண்டி விபத்து
நோயாளிகளை ஏற்றிச் சென்ற முழங்காவில் வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து நேற்று (05) இடம்பெற்றுள்ளது.
முழங்காவில் ஆதார வைத்தியசாலையில் இருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு இரண்டு நோயாளிகளை ஏற்றிச் சென்ற முழங்காவில் நோயாளர் காவு வண்டியே விபத்துகுள்ளாகியுள்ளது.
உழவு இயந்தின் மீது மோதி விபத்து
பூநகரிக்கும் பரந்தனுக்கும் இடைப்பட்ட பகுதியில், நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற உழவு இயந்தின் மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் நோயாளர் காவு வண்டியின் முன் பக்கம் மிகவும் சேதமடைந்துள்ளது.
தொடர்ந்தும் இயங்க முடியாத நிலை ஏற்பட்டதால் நோயாளிகளை ஏற்றிச் செல்வதற்கு கிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Author
on
January 06, 2025
Rating:


No comments:
Post a Comment