ஓமந்தையில் ரயில் தடம்புரள்வு
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த கடுகதி ரயில் ஓமந்தை ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது.
இந்த ரயிலின் ஒரு பெட்டி இன்று (26) மாலை 4 மணியளவில் தடம் புரள்வுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், தற்போது ரயிலின் தடம்புரள்வை சரிசெய்யும் பணியில் ரயில்வே திணைக்கள ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மஹவவிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான ரயில் பாதை புதுப்பிக்கப்பட்டு, மீண்டும் திறக்கப்பட்ட பின்னர் பதிவான முதல் ரயில் தடம் புரள்வு சம்பவம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
ஓமந்தையில் ரயில் தடம்புரள்வு
Reviewed by Author
on
January 26, 2025
Rating:

No comments:
Post a Comment