அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற இரண்டாம் மொழி கற்கை நெறி சான்றிதல் வழங்கும் நிகழ்வு

 தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (NILET) ZOOM தொழில்நுட்பம் ஊடாக வடக்கு, கிழக்கு மற்றும் மேல் மாகாணத்தில் அரச உத்தியோகத்தர் களுக்காக மேற்கொண்ட 100 மணித்தியாலம் மற்றும் 150 மணித்தியால இரண்டாம் மொழி பயிற்சி நெறியை பூர்த்தி செய்த அரச உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மற்றும் கலை நிகழ்வு  நேற்று (13) மன்னார் நகரசபை கலாசார மண்டபத்தில் மன்னாரில் பிரபல்யமான இரண்டாம் மொழி ஆசிரியையும், சிரேஸ்ர இரண்டாம் மொழிப்பாட தேசிய மட்ட வளவாளருமான திருமதி இந்துனில் சாகரிகா பிகிறாடோ   தலைமையில் இடம் பெற்றது. 


 2020 ஆண்டு அரச கரும மொழி அமைச்சினால் வெளியிடப்பட்ட 18 ம் இலக்க சுற்றறிக்கைக்கு அமைவாக அரச உத்தியோகத்தர்களின் மொழி புலமையை விருத்தி செய்யும் முகமாக மேற்கொள்ளப்பட்ட பயிற்சி நெறியை பூர்த்தி செய்த பயிலுனர்கள் 175 பேருக்கு மேற்படி சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.


 குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக, தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (NILET) கல்வி மற்றும் ஆய்வு அதிகாரி திருமதி.பாலரஞ்சனி காந்தீபன்,தேசிய இணைப்பாளர் திரு டிலான் ரணசிங்க அவர்களும், தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (NILET) மத்திய மாகாண இணைப்பாளர் திரு சமீர அத்தப்பத்து ,மன்னார் மாவட்ட மொழி இணைப்பாளர் திருமதி சிந்துஜா சில்வா, மற்றும் இரண்டாம் மொழி பாட வளவாளர்களாகிய திரு ஈ.எஸ்.கே.ரோச், செல்வி சுபாஷினி விநாயகமூர்த்தி, திருமதி வீ.சர்மினி ஆகியோர் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர். 


 குறித்த நிகழ்வில் இரண்டாம் மொழி சிங்கள கற்கை நெறிகளை பூர்த்தி செய்த பயிலுனர்களால் பல்வேறுபட்ட கலை நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டு இடம் பெற்றது. 


 அதே நேரம் புதிய இரண்டாம் மொழி சிங்கள பாடநெறியானது (Zoom தொழில் நுட்பம், மற்றும் நேரடி வகுப்பு) ஆரம்பிக்க உள்ள நிலையில் பயிற்சி நெறியை தொடர விரும்புவோர் 0776355521 இரண்டாம் மொழி வளவாளர் திருமதி இந்துனில் சாகரிக்கா அவர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.












மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற இரண்டாம் மொழி கற்கை நெறி சான்றிதல் வழங்கும் நிகழ்வு Reviewed by Author on January 14, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.