இலங்கை பிரஜை அந்தஸ்தை பெற்ற மியன்மார் குழந்தை
மியன்மாரில் இருந்து இலங்கைக்கு தஞ்சம் கோரி வந்த கர்ப்பிணி தாய் ஒருவருக்கு நேற்று திங்கட்கிழமை (20) இரவு 11 மணியளவில் குழந்தை பிரசவித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்பரப்பில் கடந்த டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி 115 பயணிகளுடன் மியன்மார் அகதிகள் படகு கரை ஒதுங்கியிருந்தது.
பின்னர் கப்பல் கரைக்கு வர முடியாத நிலையில் கடற்படையினரின் உதவியுடன் திருகோணமலை கடற்படை தளத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் திருகோணமலை ஐமாலிய முஸ்லீம் மகா வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு, 115 பயணிகளும் முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படை தளம் ஒன்றில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
குறித்த படகில் 45 சிறுவர்கள்,24 பெண்கள்,46 ஆண்கள் உள்ளடங்கலாக 115 பேர் தஞ்சம் கோரியிருந்ததோடு, அவர்களில் கர்ப்பிணி தாய் தாயொருவர் நேற்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ஆண் குழந்தையை பிரசவித்துள்ளார்.
Reviewed by Author
on
January 21, 2025
Rating:


No comments:
Post a Comment