நேபாள எல்லைக்கு அருகில் அடுத்தடுத்து பாரிய நிலநடுக்கம் – 53 பேர் சடலமாக மீட்பு
நேபாள எல்லைக்கு அருகே திபெத்தில் இன்று காலை ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 62 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இடிபாடுகளில் இருந்து 53 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஏஎப்பி (AFP) செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திபெத்-நேபாள எல்லைப் பகுதியில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஒன்பது பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏஎப்பி (AFP) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாள எல்லைக்கு அருகிலுள்ள திபெத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை பாரிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், பீகார், டில்லி, அசாம் மற்றும் மேற்கு வங்கம் உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
நிலநடுக்கத்திற்கான தேசிய மையத்தின் (NCS) தகவல்படி, திபெத்தின் ஜிசாங்கில் காலை 6:35 மணிக்கு 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிசாங்கை நான்கு நிலநடுக்கங்கள் உலுக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாவது ரிக்டர் அளவுகோலில் காலை 5:41 மணிக்கு 4.2 ஆகவும், இரண்டாவது காலை 6:35 மணிக்கு 7.1 ஆகவும், மூன்றாவது 7:02 மணிக்கு 4.7 ஆகவும், நான்காவது 7:07 மணிக்கு 4.9 ஆகவும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
முசாபர்பூர், மோதிஹாரி, பெட்டியா, முங்கர், அராரியா, சீதாமர்ஹி, கோபால்கஞ்ச், வைஷாலி, நவாடா மற்றும் நாலந்தா உள்ளிட்ட பீகாரின் பல பகுதிகளில் சுமார் 30 வினாடிகள் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Reviewed by Author
on
January 07, 2025
Rating:


No comments:
Post a Comment