அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் சாந்திபுரம் பகுதியில் தீ விபத்து

 மன்னார் சாந்திபுரம் பகுதியில் இன்று காலை குடிசை வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக முழு வீடும்  முற்றாக எரிந்து தீக்கிரையாகிய நிலையில் மக்களின் உதவியால் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது


மன்னார் சாந்திபுரம் சிறுவர் பூங்காவிற்கு பின் பகுதியில் திடீர் என தீ பரவல் ஏற்பட்ட நிலையில் அதனை அவதானித்த மக்கள் விரைவாக செயற்பட்டதன் அடிப்படையில் தீப்பரவல் அருகில் உள்ள வீடுகளுக்கு பரவ முன்னதாக அனைக்கப்பட்டுள்ளது


அதே நேரம் மன்னார் மின்சாரசபை மன்னார் நகரசபையின் தீயணைப்பு வாகனம் உடனடியாக  சம்பவ இடத்திற்கு வருகை தந்ததுடன் முழுமையாக தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது


குறித்த தீ பரவல் காரணமாக எந்த ஒரு உயிர் சேதமமும் ஏற்படவில்லை என்பதுடன்  மக்கள் ஒண்றினைத்து செயற்பட்டதன் அடிப்படையில் பெரும் தீ விபத்தானது தவிர்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது










மன்னார் சாந்திபுரம் பகுதியில் தீ விபத்து Reviewed by Author on January 27, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.