வவுனியாவில் கிராம சேவகர் ஒருவர் பதவியில் இருந்து இடைநிறுத்தம்
வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடமையாற்றிய கிராம சேவகர் ஒருவர் தனது கல்விச் சான்றிதழை உறுதிப்படுத்த தவறியமையால் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு கிராம சேவகராக நியமனம் பெற்ற ஒருவர் தனது மூன்று வருட நிறைவில் பதவியினை உறுதிப்படுத்த வேண்டும். குறித்த பதவியினை மூன்று வருடம் கடந்தும் தாமதாக கடந்த வருடமே குறித்த கிராம அலுவலர் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதன்போது குறித்த கிராம அலுவலர் நியமனத்திற்காக சமர்ப்பித்த க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றை பரீட்சை திணைக்களத்தால் உறுதிப்படுத்த முடியவில்லை.
இதனையடுத்து குறித்த கிராம அலுவலர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
Reviewed by Author
on
January 09, 2025
Rating:


No comments:
Post a Comment