மன்னாரில் கிளீன் ஸ்ரீலங்கா செயற்திட்டத்தின் ஊடாக கடற்கரை சுத்தப்படுத்தல் நிகழ்வு
தேசிய ரீதியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கிளீன் ஸ்ரீலங்கா செயற்திட்டத்தின் ஊடாக கரையோரங்களை சுத்தப்படுத்தும் செயற்திட்ட மானது மன்னார் மாவட்டத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (23) காலை வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மன்னார் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கீரி கடற்கரை பகுதியை சூழ உள்ள கரையோரங்கள் இன்றைய தினம் (23) முதல் கட்டமாக சுத்தப்படுத்தப்பட்டது.
மன்னார் பிரதேச செயலகத்தின் ஒழுங்கமைப்பில் மன்னார் மாவட்ட செயலகம்,மன்னார் நகரசபை,பிரதேச சபை,கடற்படை பொலிஸார்,இராணுவத்தினர் இணைந்து குறித்த சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கனகேஸ்வரன்,தேசிய மக்கள் சக்தியின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ,மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் சந்திரபால,உட்பட பிரதேச செயலாளர்கள்,நகரசபை,பிரதேச சபை செயலாளர்கள்,அரச உத்தியோகத்தர்கள் உள்ளடங்களாக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இணைந்து சுத்தப்படுத்தல் பணிகளில் ஈடுபட்டனர்.
அதே நேரம் மன்னார் பிரதான பாலம்,செளத்பார் கடற்கரை பகுதிகளும் இன்றைய தினம் கிளீன் ஸ்ரீலங்கா செயற்திட்டத்தின் ஊடாக சுத்தம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது
மன்னாரில் கிளீன் ஸ்ரீலங்கா செயற்திட்டத்தின் ஊடாக கடற்கரை சுத்தப்படுத்தல் நிகழ்வு
Reviewed by Author
on
February 23, 2025
Rating:

No comments:
Post a Comment