“கணேமுல்ல சஞ்சீவ“ சுட்டுக் கொலை ; துப்பாக்கிதாரிக்கு உதவிய பெண்ணின் தாயும் சகோதரனும் தடுப்பு காவலில் வைத்து விசாரணை
கொழும்பு - புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த புதன்கிழமை (19) பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ“ என்பவரை சுட்டுக் கொலை செய்வதற்கு துப்பாக்கிதாரிக்கு உதவி செய்ததாக கூறப்படும் பெண்ணின் தாய் மற்றும் சகோதரன் ஆகியோர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை (25) அறிவித்துள்ளனர்.
கொழும்பு - புதுக்கடை நீதிமன்றத்துக்குள் சட்டத்தரணி வெடத்தில் சென்று துப்பாக்கிதாரிக்கு உதவிய செய்ததாக கூறப்படும் இஷாரா செவ்வந்தி என்ற 25 வயதுடைய பெண்ணொருவர் பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், குறித்த பெண்ணும் துப்பாக்கிதாரியும் கடந்த 15 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை திவுலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த போது, குறித்த பெண்ணின் தாயும் சகோதரனும் இந்த விடுதிக்கு சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரவினர் நீதிமன்றில் மேலும் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment