கழுதைகள் கடத்தல் முறியடிப்பு ; இருவர் கைது
சட்டவிரோதமாக 6 கழுதைகளை ஏற்றிச் சென்ற இரண்டு லொறிகளை கைப்பற்றி சாரதிகளை நுரைச்சோலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நுரைச்சோலை பொலிஸார் நேற்று புதன்கிழமை (26) மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இவர்கள் நரக்கல்லி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கற்பிட்டி பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நுரைச்சோலை பொலிஸார் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கண்டகுளிய பகுதியில் வசிப்பவர்களாவர்.
இவர்கள் கழுதைகளை கல்பிட்டி கந்தகுளியிலிருந்து படல்கம பகுதிக்கு ஏற்றிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கழுதைகள் கடத்தல் முறியடிப்பு ; இருவர் கைது
Reviewed by Vijithan
on
February 27, 2025
Rating:

No comments:
Post a Comment