வைத்தியசாலை மலசலகூடத்தில் குழந்தையை பெற்று யன்னலால் வீசிய மாணவி
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 18 வயது மாணவி ஒருவர் மலசலகூடத்தில் குழந்தையை பெற்று யன்னல் வழியாக வீசிய குழந்தை காப்பாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் சம்பவம் இன்று (23) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுபற்றி தெரியவருவதாவது, மாவட்டத்தில் ஒரு பிரதேசத்தைச் சேர்ந்த உயர்தரத்தில் கல்விகற்றுவரும் 18 வயதுடைய மாணவி ஒருவர் சம்பவதினமான இன்று அதிகாலை 3.30 மணியளவில் நிறைமாத கற்பணியான இவர், கர்ப்பமான விடயத்தை மறைத்து வயிற்றுவலி என கூறி மட்டு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து வயிற்றுவலி என தெரிவித்த இவரை சரியான முறையில் வைத்தியர்கள் சோதனையிடாது, வயிற்று வலிக்கான ஊசி மூலமான வலி நிவாரண மருந்து கொடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அதிகாலை 5 மணியளில் குறித்த மாணவி மலசலகூடத்திற்கு சென்ற நிலையில், குழந்தையை பெற்று யன்னல் வழியாக வீசியநிலையில் குழந்தை யன்னலில் கீழ் உள்ள பிளேற்றில் வீழ்ந்து அழுகுரல் கேட்டதையடுத்து தாதியர்கள் அங்கு சென்று குழந்தையை மீட்டுள்ளனர்.
பின்னர் சம்பவம் தொடர்பில் தெரியவந்ததையடுத்து வீசிய குழந்தையை மீட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன், தாய்க்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை குறித்த குழந்;தையும் தாயும் பாதுகாப்பாக உள்ளதாக மட்டு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கலாரஞ்சினி கணேசலிங்கம் தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வைத்தியசாலை மலசலகூடத்தில் குழந்தையை பெற்று யன்னலால் வீசிய மாணவி
Reviewed by Author
on
February 23, 2025
Rating:
Reviewed by Author
on
February 23, 2025
Rating:


No comments:
Post a Comment