யாழில் சோடா அருந்திய 9 மாத குழந்தைக்கு நேர்ந்த கதி
யாழ்ப்பாணத்தில் சோடா என நினைத்து டீசலை அருந்திய ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் யாழில் பதிவாகியுள்ளது.
ஊர்காவற்துறை, நாரந்தனை தெற்கு பகுதியைச் சேர்ந்த ஒரு வயது 9 மாதங்கள் நிரம்பிய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த 18ஆம் திகதி குழந்தையின் தந்தை உழவு இயந்திர திருத்த வேலையில் ஈடுபட்டுள்ளார். பின்னர் டீசலை ஒரு போத்தலில் வைத்துவிட்டு சென்றுள்ளார்.
இதன்போது அவ்விடத்திற்கு வந்த குழந்தை சோடா என நினைத்து டீசலை அருந்தியது. இந்நிலையில் குழந்தை மயக்கமுற்றது.
பின்னர் குழந்தை ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 2.30 மணியளவில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்க்பபடுகின்றது.
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
Reviewed by Vijithan
on
March 23, 2025
Rating:


No comments:
Post a Comment