யாழில் பொலிஸார் மீது தாக்குதல் நடாத்தி தப்பியோடிய நபர்
யாழ். தெல்லிப்பழையில் கைது செய்யச் சென்ற பொலிஸார் மீது சந்தேகநபர் ஒருவர் தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இந்த சம்பவம் நேற்றையதினம் (18) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வைத்தியசாலையில் பொலிஸ் உத்தியோகத்தர்
சந்தேக நபரை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. அதன்படி தெல்லிப்பழை பொலிஸார் சந்தேகநபரை கைது செய்வதற்கு சென்றனர். இதன்போது, சந்தேகநபர் தகாத வார்த்தைப் பிரயோகங்களை பிரயோகித்து, பொலிஸார் மீது தாக்குதல் நடாத்தி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
தாக்குதலுக்குள்ளான பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய சந்தேகநபரை தேடி தெல்லிப்பழை பொலிஸார் வலைவீசி வருகின்றனர்.
Reviewed by Vijithan
on
March 19, 2025
Rating:


No comments:
Post a Comment