அண்மைய செய்திகள்

recent
-

கச்சத்தீவில் தங்க சங்கிலி அறுத்த பெண்ணுக்கு விளக்கமறியல்!

 

புனித கச்சத்தீவு அந்தோனியார் ஆலயத்தில் பெண்ணொருவரின் தங்க சங்கிலியை அறுத்த பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளதாக நெடுந்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். 

நேற்று முன்தினம் (13) மாலை புனித கச்சத்தீவு அந்தோனியார் ஆலயத்தின் திருச்சிலுவை பவணியின் பொழுது திடீரென பெண்ணொருவர் பவணியில் இருந்த பெண்ணொருவரின் நான்கு அரை பவுண் தங்க சங்கிலியை அறுத்துள்ளார். 

உடனடியாகவே கடமையில் இருந்த பொலிஸார் குறித்த பெண்ணை மடக்கி பிடித்து கைது செய்து சங்கிலியை கைப்பற்றியுள்ளனர். 

இதேவேளை, சந்தேகநபர் தனது முகவரி தொடர்பாக மூன்று இடங்களை பொலிஸாருக்கு கூறிய நிலையில், கச்சத்தீவுக்கு வருகை தந்த நீதவான், சந்தேகநபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார். 

மேலதிக குற்ற சம்பவங்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என நெடுந்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறியுள்ளார்.











கச்சத்தீவில் தங்க சங்கிலி அறுத்த பெண்ணுக்கு விளக்கமறியல்! Reviewed by Vijithan on March 15, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.