அண்மைய செய்திகள்

recent
-

6 மாத காலத்திற்கு சிங்கப்பூரில் இருந்து பெற்றோல் இறக்குமதிக்கு அனுமதி

 2025 ஏப்ரல் 15 முதல் 2025 ஒக்டோபர் 14 வரையிலான 06 மாத காலப்பகுதியில், பெற்றோல் 92 Unl 300,000+/-5% பீப்பாய்கள் கொண்ட 05 கப்பல் சரக்குகளை கொள்முதல் செய்வதற்காக, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்ட விநியோகஸ்தர்களிடம் இருந்து விலைமனுக்கள் கோரப்பட்டிருந்தன. 


இதற்கமைய, 07 விநியோகஸ்தர்கள் இதற்காக விலைமனுக்களை சமர்ப்பித்திருந்தனர். 

அதன்படி, நிலையான தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவின் மற்றும் அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட சிறப்பு நிலையான கொள்முதல் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், மிகக் குறைந்த விலைமனுவை சமர்ப்பித்த சிங்கப்பூரைச் சேர்ந்த M/s Vitol Asia Pte. Ltd நிறுவனத்திற்கு இந்த கொள்முதல் ஒப்பந்தத்தை வழங்குவதற்காக எரிசக்தி அமைச்சர் முன்வைத்த யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.





6 மாத காலத்திற்கு சிங்கப்பூரில் இருந்து பெற்றோல் இறக்குமதிக்கு அனுமதி Reviewed by Vijithan on April 08, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.