மன்னார் நகர சபை யை மன்னார் மாநகர சபையாக தரமுயர்த்த நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்-மன்னார் நகர சபை வேட்பாளர் எம்.எச்.எம்.பாஹிம்
ஜனாதிபதி அனுர குமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தியை பலப்படுத்தி எமது மாவட்டத்தின் அபிவிருத்தியை மேம்படுத்த அனைவரும் கை கொடுக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் மன்னார் நகர சபை வேட்பாளர் தொழிலதிபர் எம்.எச்.எம்.பாஹிம் தெரிவித்துள்ளார்.
-இன்றைய தினம் சனிக்கிழமை(3) ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
தேசிய மக்கள் சக்தி வெற்றி பயணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.மன்னார் நகர சபை யை தேசிய மக்கள் சக்தியே கைப்பற்றும்.தமிழ் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கான ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க திகழ்கின்றார்.
ஜனாதிபதி தேர்தலில் அதி பெரும்பான்மையாக வெற்றி பெற வைத்து,பாராளுமன்ற பொதுத் தேர்தலில் அவரின் கட்சியை மூன்றில் இரண்டு பெரும் பான்மையாக வெற்றி பெற வைத்து இன்று உள்ளூராட்சி மன்றத்தில் களம் இறங்கி உள்ளனர்.
நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்து உள்ளுராட்சி சபைகளை கைப்பற்றி ஜனாதிபதியின் கரத்தை பலப்படுத்த வேண்டும்.
மன்னார் மாவட்ட மக்களும் திசைகாட்டி க்கு வாக்களித்து எங்களை பலப்படுத்த வேண்டும்.இனவாத கருத்துக்களை காதில் போட்டுக் கொண்டு,செயல்பட வேண்டாம்.
எதிர் கட்சியில் இருந்து கொண்டு எவ்வித அபித்தியையும் நாம் முன்னெடுக்க முடியாது.எனவே மன்னார் நகர சபை உள்ளடங்களாக அனைத்து உள்ளூராட்சி சபைகளை சேர்ந்த மக்களும் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்து எமது வெற்றியை உறுதிபடுத்தி மன்னார் நகர சபை யை மன்னார் மாநகர சபை யாக தரமுயர்த்த நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment