கொழும்பில் உயிரிழந்த பாடசாலை மாணவி ; ஆசிரியர் தொடர்பில் கல்வி அமைச்சு அதிரடி நடவடிக்கை
கொழும்பின் பிரபல பாடசாலையின் 10 ஆம் ஆண்டு மாணவி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அது குறித்து அமைச்சின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அம்ஷிகாவுக்கு நீதிகோரி ஆர்ப்பாட்டம் சம்பந்தப்பட்ட பாடசாலையின் அதிபரிடம் அது குறித்த விபரிப்புக்களை பெறவும், சம்பவத்தில் தொடர்புடைய ஆசிரியரை உடனடியாக இடமாற்றம் செய்யவும் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து பொலிஸ் விசாரணை அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும், அறிக்கை கிடைத்தவுடன் உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மீதான தாக்குதல்; ஆபரேஷன் சிந்தூர் ; இந்தியா பெயரிட காரணம் என்ன? பாகிஸ்தான் மீதான தாக்குதல்; ஆபரேஷன் சிந்தூர் ; இந்தியா பெயரிட காரணம் என்ன? கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் கடந்த 29ஆம் திகதி உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி டில்ஷி அம்ஷிகாவுக்கு நீதிகோரி ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலைக்கு முன்னால் இன்று போராட்டம் இடம்பெற்றது. உயிரிழந்த மாணவி குறித்த பாடசாலையின் ஆசிரியரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக சந்தேகம் இருப்பதாகவும், அதன் விளைவாக மாணவி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
கொழும்பில் உயிரிழந்த பாடசாலை மாணவி ; ஆசிரியர் தொடர்பில் கல்வி அமைச்சு அதிரடி நடவடிக்கை
Reviewed by Vijithan
on
May 08, 2025
Rating:

No comments:
Post a Comment